அறிவோம் தாவரங்களை – அழுகண்ணி செடி
அழுகண்ணி செடி (Drosera burmanni)
ஈரப்பதம் மிகுந்த இடத்தில் இருக்கும் இனிய செடி நீ!
ஒரு அடி வரை நீளம் வளரும் கொத்துச்செடி நீ!
சதுரகிரி மலையில் அதிகம் காணப்படும் மூலிகைச் செடி நீ!
வடமொழியில் நீ ‘சாவ்வல்ய கரணி’!
நரை, திரை, மூப்பு, பிணி, வெட்டுக்காயங்கள், தாதுபுஷ்டி, தேகபுஷ்டி, கத்தி, துப்பாக்கி, விபத்து, சர்க்கரை வியாதி முதலியவற்றால் உண்டாகும் புண்கள் ஆகியவற்றுக்கு ஏற்ற அற்புத மூலிகை நிவாரணி நீ!
காலாங்கி, நாதர சித்தர் போற்றும் கற்பக மூலிகை நீ!
பனித்துளி போல் நீர் கசியும் இலை நுனி செடியே!
ஜீவ சக்தி உடைய மூலிகைச் செடியே!
வசியம் செய்யப் பயன்படும் லட்சுமி கடாட்ச செடியே!
தொட்டவுடன் கைகூப்பும் வணக்க இலை செடியே!
நூறு வயது ஆயுள் தரும் கற்பக மூலிகையே!
வலிமையைத் தரும் வல்லமைச் செடியே!
அழகைக் கொடுக்கும் அற்புதச் செடியே!
இனிப்புச்சுவை மிகுந்த இலை செடியே!
நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)
நெய்வேலி.
📱9443405050.