அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல்

Must read

அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல்

 திண்டுக்கல் மாவட்டம் வாஸ்து சாஸ்திரப்படி அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரமாக திண்டுக்கல் உள்ளது. மேற்கு திசையில் மலையும், அதன் மீது கோட்டையும், அமைந்துள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோட்டை இன்றும் அழியாமல் உள்ளது.

இந்த கோட்டையிலிருந்து பழநிக்குச் சுரங்கப்பாதை இருப்பதாகவும், இந்த வழியாகப் பல முறை திப்புசுல்தான் பழநிக்கு சென்றாகவும் வரலாறு கூறுகிறது. இந்த மலைக்கோட்டையின் அழகான பின்னணியில்தான் இந்த அம்மன் கோயில் இருக்கிறது. இந்த கோட்டையால்தான் அம்மனும் கோட்டை மாரியம்மன் என அழைக்கப்படுகிறாள்.

 அம்மன் அமர்ந்த கோலத்தில் இத்தலத்தில் எழிலுற வீற்றிருக்கிறாள்.

 எட்டு கைகளுடன் காட்சி தரும் அம்மனின் வலது கைகளில் பாம்பு, சூலாயுதம், மணி, கபாலம், ஆகியவையும், இடது கையில் வில், கிண்ணம், பாம்பு, ஆகியவை காணப்படுகின்றது.

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய பீடமும், அம்மனின் மூலஸ்தான விக்ரகம் மட்டுமே இருந்தது. மலைக்கோட்டையின் கீழ் திப்பு சுல்தான் காலத்தில் இருந்த ராணுவத்தினர் ஒரு சிறு மடம் நிறுவி மாரியம்மன் சிலையை வைத்தனர். அதுவே திண்டுக்கல் மக்களுக்குக் கோட்டை மாரியம்மனாகவும் காவல் தெய்வமாக உள்ளது.
இக்கோயிலுக்கென்று சிறப்பு வாயில்கள் மூன்று உள்ளது. அம்மன் ஊர்வலக்காலங்களில் வெளியே செல்வது முன்புறமாகச் செல்லும். பின்புற வாயில்கள் மலைக்கோட்டையை ஒட்டியுள்ளது. ஆண்டுதோறும் மாசிமாதம் 20 நாட்கள் திருவிழா நடைபெறும்.
சிறப்பம்சங்கள் :
இந்த அம்மன் மற்ற தெய்வங்களைக் காட்டிலும் சிலையின் அடிப்பகுதி, பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் புதைந்து இருப்பது சிறப்பாகும்.

More articles

Latest article