அறிவோம் தாவரங்களை கோவைச்செடி

கோவைச்செடி. (Coccinea Indica)

வரப்புகளில், தோப்புகளில், காடுகளில் படர்ந்து கிடக்கும் பசுமைக் கொடி நீ!

வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்பூசணி உன் தம்பி செடி!

மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக் கோவை, அப்பைக் கோவை, கருங் கோவை, கார்க்கோவை, இனிப்புக்கோவை, மணல் கோவை எனப் பல்வேறு பெயர்களில் பரிணமிக்கும் ஒரு பொருள் குறித்த பல சொல் கிளவி நீ!

 “கண் குளிர்ச்சி பெறும்…புண்ணும் சிரங்கும்…..புரண்டு ஓடும், கோதிலாக் கோவை இலைக்கு” என அகத்தியர் குணபாடம் போற்றும் அற்புத செடி நீ!

தேரையர் அந்தாதி போற்றும் சிறப்புச் செடி நீ!

சர்க்கரை நோய், கண் நோய் , வியர்க்குரு, தாதுபுஷ்டி, தோல் நோய், புண்கள், சொறி ,சிரங்கு, படை, கரப்பான், மார்புச்சளி, மதுமேகம், கண்டமாலை, வீக்கம், இருமல் ,ஆஸ்துமா ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

சமையலுக்கு உகந்த காய் கோவைச்செடியே!

கரும்பலகையை மெருகேற்றும் இலை செடியே!

பெண்கள் இதழுக்கு உவமையாகும் கோவைப் பழச்செடியே!

இலை, காய் ,தண்டு, கிழங்கு என எல்லாம் பயன்படும் நல்ல செடியே!

இனிப்பு, புளிப்பு, கசப்புச் சுவை கொண்ட கனி செடியே!

உணவாகப் பயன்படும் காய் செடியே! உடம்பைச் சிவப்பாக்கும் உன்னதச் செடியே!

நீவிர் உயர்வற்றுச் சிறப்புற்று வாழியவே!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

நெய்வேலி

📱9443405050.