- அறிவோம் தாவரங்களை – தர்பூசணி
தர்பூசணி.(Citrullus lanatus)
ஆப்பிரிக்கா உன் தாயகம்!
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு பாரதம் வந்த பழக்கொடி நீ!
சீனா, துருக்கி,ஈரான்,ரஷ்யா, பிரேசில், அமெரிக்கா நாடுகளில் அதிகமாகக் காணப்படும் கொடித் தாவரம் நீ!
தண்ணீர் பழம், குமட்டிப்பழம், வத்தக பழம், கோசகப் பழம் எனப் பல்வேறு பெயர்களில் பரிணமிக்கும் ஒரு பொருள் குறித்த பல சொல் கிளவி நீ!
சிறுநீரகம், இதயநோய், கர்ப்பிணிகளின் உயர் ரத்த அழுத்தம், மலச்சிக்கல், தோல் நோய்கள், கண்பார்வை, உடல் பருமன், பக்கவாதம், கீல்வாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
70 நாட்கள் வரை வாழ்ந்து மடியும் இனிய கொடியே!
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் வயகரா பழக்கொடியே!
நீர்ச்சத்து மிகுந்த தண்ணீர்பழக் கொடியே!
நார்ச்சத்தும் மாவுச்சத்தும் உடைய மூலிகைக் கொடியே!
வறட்சியைப் போக்கும் குளிர்ச்சி பழக்கொடியே!
வெப்பத்தைத் தணிக்கும் கோடைப் பழக்கொடியே!
தாகத்தைத் தணிக்கும் பச்சை நிறக் கொடியே!
தேநீர் தயாரிக்க விதை கொடுக்கும் திவ்யமே!
ஒரு ஏக்கருக்கு 15 டன் பழம் தரும் வேளாண் கொடியே!
நீவிர் நலமுடன் வளமுடன் வாழ்க! வளர்க! உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)
நெய்வேலி.
📱9443405050.