அறிவோம் தாவரங்களை – குமட்டிக்காய் கொடி

குமட்டிக்காய் கொடி. Citrullus Colocynthis.

மெடட்ரேனியம் கடற்கரைப் பகுதி, ஆசியா உன் தாயகம்!

தர்பூசனி போன்று காணப்படும் தனி வகை கொடி நீ!

மணற்பாங்கான இடங்களில் வளர்ந்திருக்கும் படர்கொடி நீ!

ஆப்பிரிக்கா, இஸ்ரேல், பாலஸ்தீனம் நாடுகளில் அதிகமாக வளரும் அழகு கொடி நீ!

விவசாயிகளின் களைக்கொடி நீ!

புழுவெட்டு, மலச்சிக்கல், சிறுநீர் பிரச்னை,   இளநரை, வயிறு வீக்கம், வாயுத் தொல்லை, கர்ப்பப்பை கோளாறுகள், நீர்க் கட்டி, வயிற்றுப் புழுக்கள், முடி வளர்ச்சி ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

சித்த மருத்துவத்தில் பயன்படும் சிறப்புச்செடி நீ!

ஆற்றுத் தும்மட்டி, பேய்க் குமட்டி,வரித்தும்மம்,  கொம்மட்டி எனப் பல்வேறு பெயர்களில் பரிணமிக்கும் நல் வகைகொடி நீ!

இலை, காய்,வேர் என எல்லாம் பயன்படும் நல்ல கொடியே!

கசப்புச் சுவை கொண்ட காய் கொடியே!

மஞ்சள் நிற பூப்பூக்கும் மலர்க் கொடியே!

தரையோடு வேர் விட்டுப் படரும்  தங்கக் கொடியே!

பந்துபோல் பச்சை நிற காய் விதை தரும் பசுமை கொடியே!

கால்நடைகளின் தீவனமே!

விவசாயிகளின் பூச்சி விரட்டியே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க !உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்

நெய்வேலி.

☎️9443405050