அறிவோம் தாவரங்களை – கிளா
கிளா ( Carissa carandas)
இந்தியா உன் தாயகம்!
வெப்பமண்டலக் காடுகளின் வேலிகளில் வளர்ந்திருக்கும் முட்செடி தாவரம் நீ!
3 அடிவரை உயரம் வளரும் கிளா செடி நீ!
சிறுகளா, பெருகளா என இருவகையில் விளங்கும் இனிய செடி நீ!
புளிப்புச் சுவை கொண்ட விருப்ப காய்ச் செடி நீ!
காய்ச்சல், கண்பார்வை, ரத்தக் கொதிப்பு, ரத்தசோகை, சர்க்கரை நோய், மந்தமான பசி, மசக்கை, வாந்தி, பல்வலி, தாகம், நாவறட்சி ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
“நாளை கிடைக்கப்போகும் பலாக்காயை விட இன்று கிடைக்கும் களாக்காயே மேல்” என்ற பழமொழிக்கு வித்தாய் அமைந்த வினோதச் செடியே!
ஊறுகாய், பச்சடி, தொக்குத் தயாரிக்கப் பயன்படும் உன்னதச் செடியே!
கொத்துக் கொத்தாக வெள்ளைப் பூப்பூக்கும் பூச்செடியே!
பச்சைக்காய் தரும் பசுமைச் செடியே!
இனிப்புச் சுவைத் தரும் கருப்புக் கனிச் செனியே!
சிறுவர்களுக்குக் காய், கனி, பூத்தரும் கொடைச் செடியே!
பித்தம் போக்கும் பிதாமகனே!
நிலங்களுக்கு வேலியாகும் நல்ல செடியே!
25 ஆண்டுகள் வரை வாழும் இனிய செடியே!
‘செர்ரி’ தயாரிக்கப் பயன்படும் சிறப்புக் களாச் செடியே!
முட்டை வடிவ இலைகளையுடைய புதர் செடியே!
நீவிர் நலமுடன் வளமுடன் வாழ்க! வளர்க! உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)
நெய்வேலி.
📱9443405050.