அறிவோம் தாவரங்களை – முடக்கத்தான்
முடக்கத்தான்.(Cardiospermum halicacabum).
வரப்புகளில் வேலிகளில் வளர்ந்திருக்கும் பச்சைக் கொடி!
2500 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய கொடித் தாவரம்!
நீ முடக்குகளை அகற்றுவதால் ‘முடக்கற்றான்’ என்றானாய்!
முடக்கொத்தான், முடக்கொற்றான், முடக்கறுத்தான், கொற்றன், உழிஞை, எனப் பல்வேறு பெயர்களில் பரிணமிக்கும் மருத்துவ மூலிகை!
ஆப்பிரிக்கா, ஆசியாவின் வெப்ப மண்டலத்தில் வளரும் கொடித் தாவரம்!
உன் பளிங்குக் காய்கள் குழந்தைகளுக்கு இன்பம் தரும் இலவச வெடிகுண்டு பட்டாசு!
ஹோமியோபதி மருத்துவத்தின் முதன்மை மருந்து!
பழங்கால உழிஞைப் போர் வீரர்கள் சூடிய வெற்றி பூக்கொடி!
மூட்டுவலிக்கும் முடக்கு வாதத்திற்கும் ஏற்ற நாட்டு மருந்து!
கை,கால் வலிக்குக் கண்கண்ட பச்சிலை!
காது சீழ் வலிக்கும் கைமேல் பலம் கிட்டும்!
இட்லி தோசைகளில் நீ அத்திப்பூ!
முடக்கத்தான் சட்னி மற்றும் துவையல், சூப், ரசம், பொடி எனப் பல்வேறு விதத்தில் மானிடர்க்குப் பயன்படும் கொடைக்கொடி!
கிழவனையும் இளைஞனாக்கும் மூலிகையே!
கிளிப்பச்சை இலை வடிவ மாமருந்தே!
நாளும் நலம்பெற்று வளம்பெற்று வாழியவே!
நன்றி : பேரா.முனைவர்.
ச.தியாகராஜன்(VST).
நெய்வேலி.
📞9443405050.