அறிவோம் தாவரங்களை – இருவாட்சி மரம்

இருவாட்சி மரம்.(Bauhinia variegata)

ஆசியா ,சீனா, இந்தியா உன் தாயகம்!

திருவாச்சி, திரு ஆத்தி, மந்தாரை, இருவாச்சி எனப் பல்வேறு பெயர்களில் பரிணமிக்கும் பசுமை மரம் நீ!

12 மீ. வரை உயரம் வளரும் பரிசுத்த மரம் நீ!

திரு ஆப்பாடி, திருச்சிற்றேமம், திருச்செங்காட்டங்குடி, கோயிலின் தலமரம் நீ!

ஆப்பிரிக்கா  நாட்டுப் பாரம்பரிய வீட்டுக் கட்டுமரம் நீ!

பட்டாம்பூச்சி, தேனீக்களைக்  கவரும் காந்தப் பூ மரம் நீ!

பாலுணர்ச்சியைத் தூண்டும் விதை மரம் நீ!

வெப்ப மண்டலத்தில் வளர்ந்திருக்கும் அற்புத மரம் நீ!

தாய்ப்பால் சுரப்பு , ரத்த வாந்தி, வயிற்றுப் பூச்சிகள், மலச்சிக்கல், மாதவிடாய்ப் பிரச்சனை,    சிறுநீர்ப் பிரச்சினை, சுவாசக் கோளாறு, வாதம், காயம், சளி ,மூட்டு வலி, உடல் எடை குறைப்பு ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

சாறு, துவையல், சாயம், கூடை தயாரிப்பு எனப் பல்வேறுவகையில்  பயன்படும் நல்வகை மரம் நீ!

சித்த வைத்தியத்தில் பயன்படும் செம்மை மரமே !

இலை, பூ, வேர், பட்டை என எல்லாம் பயன்படும் நல்ல மரமே!

சிவனுக்கு உகந்த இலை மரமே!

தவில் வாசிக்கக் குச்சி தரும் வலிமை மரமே!

சீரக வாசனை கொண்ட இலைமரமே!

இள மஞ்சள் நிற பூப் பூக்கும் மருந்து மரமே!

இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் இனிய இலை மரமே!

குடிநீருக்கு மொட்டுக் கொடுக்கும் சிறு மரமே!

கையேந்தி பவன்களின் இலைத்தட்டு  மரமே!

அலங்காரத்  தாவரமே!

நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க !உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்

நெய்வேலி.

☎️9443405050