அவிநாசியப்பர் திருக்கோயில் தகவல்கள்
மூலவர்: அவிநாசி ஈஸ்வரர் (அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்,)
தாயார்: கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி
தல விருட்சம்: பாதிரிமரம்
தீர்த்தம்: காசிக்கிணறு, நாககன்னிகைத் தீர்த்தம், ஐராவதத் தீர்த்தம்.
சிறப்பு திருவிழாக்கள்: முதலை வாய்ப் பிள்ளை உற்சவம், பிரதோசம், சிவராத்திரி, திருவாதிரை
பாடல் – பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: சுந்தரர்
அம்பாளின் கோயில் அவினாசியப்பருக்கு வலது புறம் உள்ளது பொதுவாக மற்ற கோயில்களில் இல்லாத சிறப்பு ஆகும். இக்கோவிலின் தேர்த்திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இத்தேர் தென்னிந்தியாவின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றாகும். மேலும் இத்தேர் இதன் சிற்ப வேலைகளுக்காகப் பெயர் பெற்றது.
தல வரலாறு
நாயன்மார்களுள் ஒருவரான சுந்தரர் அவிநாசிக்கு வந்த போது ஒரே தெருவின் எதிர் எதிர் வீடுகளில் ஒன்றில் பூணூல் கல்யாணமும், மற்றொன்றில் மகனை முதலை சென்றமைக்காக வருத்தமுடனும் இருந்தார்கள். அவனுக்கும் தற்போது பூணூல் கல்யாணம் நடக்கும் சிறுவனுக்கும் ஒத்த வயதே ஆகிறது. அதனை அறிந்த சுந்தரர். இச்சிவாலயத்திற்கு வந்து சிவபெருமானை பிரார்த்தனை செய்தார்.
அதனால் மூன்று வருடங்களுக்கு முன்பு முதலை விழுங்கிய சிறுவன் வளர்ந்த நிலையில் பெற்றோர்களுக்குக் கிடைத்தான். இந்த தொன்மம் இத்தலத்தில் நடந்தமையால் சிறப்புப் பெற்று இருக்கிறது.
இந்த நிகழ்வினை முதலை வாய்ப் பிள்ளை உற்சவம் என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இவ்விழா பங்குனி உத்தரத்தின் மூன்றாவது நாளன்று இக்கோயிலில் நடைபெறுகிறது.
இத்தலத்தில் உள்ள இறைவனைப் பிரம்மா நூறு ஆண்டுகளும், இந்திரனுடைய ஐராவதம் எனும் வெள்ளையானை 12 ஆண்டுகளும், தாடகை மூன்று ஆண்டுகளும், நாகக் கன்னி 21 மாதங்களும் வழிபட்டுள்ளனர்.
அமைவிடம் – ஊர்: அவிநாசி
மாவட்டம்: திருப்பூர்