அறிவோம் தாவரங்களை – சதக்குப்பை செடி
சதக்குப்பை செடி. (Anethum Graveolens).
தென் ஆசியா உன் தாயகம்!
இனிய துயில் வேண்டி கிரேக்கர்கள் தங்களின் கண்களில் வைத்துக் கொண்ட தங்க இலை செடி நீ!
எல்லா நிலங்களிலும் வளரும் நல்ல செடி நீ!
ஒரே காம்பில் நூற்றுக் கணக்கான பூக்கள் மலர்வதால் நீ ‘சதபுஷ்பா’ என்றானாய் !
75 செ.மீ. உயரம் வளரும் அழகு செடி நீ!
சோயிக்கீரை, மதுரிகை,சதகுப்பி என பல்வகைப் பெயர்களில் விளங்கும் நல்வகை செடி நீ!
இனிப்புச் சுவையும், கார்ப்புச் சுவையும் கொண்ட இனிய விதை செடி நீ!
இதயநலம்,விந்து குறைப்பு, சூட்டு இருமல், வாந்தி ,கபம் , வாதம், பெண்குறி நோய்கள், வாத நோய், இரைப்பை & நுரையீரல் நலம், உதிரச் சிக்கல்,கருப்பு தலை நோய் காது வலி பசி மந்தம் கீழ்வாய் கருப்பை வலிவு, மூக்கில் நீர்வடிதல், கட்டிகள், வீக்கம், வயிற்றுப் புண், வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், மாதவிடாய் ஒழுங்குபடுத்துதல், தாய்ப்பால் சுரப்பு, அஜீரணம் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
ரசம், குடிநீர், சாறு என எல்லா வகையிலும் பயன்படும் நல்ல செடியே!
குடை விரித்தாற்போன்று தோன்றும் மலர்ச்செடியே!
இறகு போன்ற இலை வடிவ இனிய செடியே!
கிளர்ச்சியூட்டும் மணமிகு செடியே!
ஆயுர்வேதத்தில் பயன்படும் அற்புத மருந்து செடியே!
கொத்துமல்லி விதை வடிவ விதை செடியே!
நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க!உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்.
நெய்வேலி.
📱9443405050