அறிவோம் தாவரங்களை – கருணைக் கிழங்கு செடி
கருணைக் கிழங்கு செடி. (Amorphophallus paeoniifolius).
தென்கிழக்கு ஆசியா உன் தாயகம்!
உன் இன்னொரு பெயர் பூமி சர்க்கரை கிழங்கு!
சேனைக்கிழங்கு உன் தம்பி கிழங்கு!
பசிபிக் தீவுகள், ஆசியா, இலங்கை, மலேசியா பிலிப்பைன்ஸ் நாடுகளில் சமையலுக்குப் பயன்படும் சத்துக் கிழங்கு செடி நீ!
சுமார் 600 வகைகளில் வளர்ந்து இருக்கும் அரிய செடி நீ!
கார் கருணை,காராக் கருணை என இரு வகையில் விளங்கும் இனிய செடி நீ!
லேகியம், குழம்பு, பொரியல், கூட்டு, சிப்ஸ் எனப் பல்வகையில் பயன்படும் நல்வகை கிழங்கு செடிநீ!
அஜீரணம், மூலச் சூடு, மலச்சிக்கல்,கொழுப்புக்கள் குறைப்பு, நாட்பட்டகாய்ச்சல், வெள்ளைப் படுதல், மூலநோய், எலும்பு, வலிவு, பித்தம், மாத விடாய், இதயநலம், புற்று நோய், வாத நோய், கரப்பான், சொறி, சிரங்கு, நமைச்சல் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
’குண்டு உடல் குறைக்கும் கருணைக் கிழங்கு’ என மூலிகை மணி போற்றும் முதன்மை குறுஞ்
செடியே!
ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் பயன்படும் சிறந்த செடியே!
கொத்துக் கொத்தாய்ப் பூப்பூக்கும் பச்சைக் கொடியே!
உருளையான தண்டுகொண்ட உன்னத செடியே!
9 மாதத்தில் பலன் கொடுக்கும் வேளாண் செடியே!
ஏக்கருக்கு 7 டன் வரை கிழங்கு தரும் பணப் பயிரே!
நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க!உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்
நெய்வேலி
☎️9443405050