அறிவோம் தாவரங்களை –  சர்க்கரைவள்ளி கிழங்கு கொடி 

Must read

அறிவோம் தாவரங்களை –  சர்க்கரைவள்ளி கிழங்கு கொடி

சர்க்கரைவள்ளி கிழங்கு கொடி (Ipomoea batatas).

தென் மத்திய அமெரிக்கா உன் தாயகம்!

வெப்பமண்டல நாடுகளில் விளையும் கிழங்கு கொடி நீ!

இலங்கை, இந்தியா சீனா நாடுகளில் அதிகம் வளரும் அழகு கொடி நீ!

வற்றாளை கிழங்கு, சீனிக் கிழங்கு என இருவகையில் விளங்கும் இனிய கொடி நீ!

போர்ச்சுகீசியர் மூலம் பாரதம் வந்தடைந்த புனித கொடி நீ!

இந்தோனேசியா ஆஸ்திரியாவில்  நீ ‘குமரா.!

இதயநலம், வயிறு நலம், நுரையீரல் நலம், தொண்டைப் புற்று நோய், கீல் வாதம், அஜீரணம் புகை மற்றும் மது தொடர்பான நோய்கள் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி!

உலகில் ஏழாவதாக அதிகம் விளையும் உணவு கிழங்கு கொடி நீ!

சிவப்பு, நீலம், வெள்ளை, மஞ்சள் நிற கிழங்கு தரும் செம்மை கொடி நீ!

சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன் பெரு நாட்டுக் குகைகளின்  அடையாளங்கள் உன் பழமையைப் பறை சாற்றும்!

நார்ச்சத்து நிறைந்த கிழங்கு கொடியே!

அமெரிக்க நாடுகளின் பிரதான உணவே!

130 நாட்களில் பலன் கொடுக்கும் வேளாண் கொடியே!

ஒரு ஹெக்டேருக்கு 30 டன் வரை கிழங்கு தரும் பணப்பயிரே!கால்நடைகளின் தீவனமே!

மீனவர்களின் முதன்மை உணவே!

சுட்டாலும் சுவை குன்றா அமுதமே!

கடித்தாலும் இனிக்கும் கற்பகமே!

இதய வடிவ இலை கொடியே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி  : பேரா.முனைவர். ச.தியாகராஜன்

நெய்வேலி.

📞9443405050.

More articles

Latest article