இறைவனுக்கு அபிஷேகங்கள், அர்ச்சனைகள், ஆராதனைகள் செய்வதன் விளக்கம் என்ன?

Must read

இறைவனுக்கு அபிஷேகங்கள், அர்ச்சனைகள், ஆராதனைகள் செய்வதன் விளக்கம் என்ன?

பகவத்கீதையில் (9.27) பகவான், “நீ எதைச் செய்தாலும், எதைச் சாப்பிட்டாலும், எதை ஹோமம் செய்தாலும், எதைக் கொடுத்ததாலும், எந்தத் தவத்தைச் செய்தாலும் அதையெல்லாம் எனக்கு அர்ப்பணமாகச் செய்” என்று கூறியுள்ளார்.

நாம் உண்ணும் உணவை இறைவனுக்குப் படைப்பதும், நாம் உடுக்கும் துணியை இறைவனுக்கு உடுத்திய பிறகு நாம் உடுத்துவதும், நாட் கட்டும் வீட்டை அவன் கோயிலாகக் கருதுவதும் சிறந்த தெய்வ ஆராதனையாகும்.

நாம் நீராடி மகிழ்வதால் இறைவனுக்கும் அபிஷேகம் செய்து மகிழ்கிறோம்.  “உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” என்கிறார். நம்மாழ்வார்.

இவை அனைத்தும் உன்னத மனதின் இயல்பான வெளிப்பாடுகள். இந்த ஆராதனை முறை நெடுநாளாக நமது மூதாதையர் கண்ட வழிபாட்டுச் சம்பிரதாயம்.

உலக வழக்கில் நமது மரியாதைக்கு உரியவர்கள், அன்பிற்கு உரியவர்கள், உறவினர்கள் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு நாம் ஏதேனும் வாங்கிக் கொடுக்க நினைக்கிறோம்’, வாங்கியும் கொடுக்கிறோம்.

அது போன்று எல்லா உறவுகளின் ஒட்டுமொத்தமான உறவினனான (சரியாகச் சொல்லப்போனால், உண்மையில் உள்ள ஒரே உறவினனான) நம் இறைவனோடு, நீங்கள் குறிப்பிட்ட வழிபாட்டு முறைகள் அனைத்தின் மூலமாகவும் நாம் தொடர்புகொள்கிறோம்.

More articles

Latest article