அறிவோம் தாவரங்களை – மொச்சை செடி

மொச்சைச் செடி.  (Lab lab purpureus)

ஆப்பிரிக்கா உன் தாயகம்!

அவரைக் கொடி உன் அண்ணன் ஆவார்!

வெப்ப மண்டலப் பகுதியில் விளையும் மொச்சைச் செடி நீ!

வெள்ளை, பழுப்பு, சிவப்பு, கருப்பு எனப் பல்வேறு நிறங்களில் விதைகள் கொடுக்கும் வினோதச் செடி நீ!

காய்ச்சல், வயிற்றுப் பொருமல், அஜீரணம், வலிப்பு நோய், இதயக் கோளாறு, உடல் எடை குறைப்பு, மலச்சிக்கல், புற்றுநோய், பாலுண்ணி ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

குழம்பு, சுண்டல், புளிக்குழம்பு எனப் பல்வேறு விதத்தில் பயன்படும் நல்வகை விதைச் செடி நீ!

“கோர உஷ்ணம் தணியும்” என அகத்தியர் போற்றிப் புகழும் அற்புதச் செடியே!

கென்யா தாய்மார்களுக்குத் தாய்ப்பால் சுரக்க பயன்படும் தங்கச் செடியே!

பிலிப்பைன்ஸ் மற்றும் சீன நாட்டில் பாலுணர்வு தூண்டியாகப் பயன்படுத்தப்படும் வயாகராவே!

உடலைத் தேற்றும் உன்னத விதைச் செடியே!

பச்சையாகவும் காயவைத்தும் சமைக்கப் பயன்படும் விதைச் செடி நீ!

புரதச்சத்து நிறைந்த புனித விதைச் செடியே!

வறட்சியைத் தாங்கும் வரப்பிரசாதச் செடியே!

இனிப்புச் சுவை கொண்ட இனிய செடியே!

5 மாதத்தில் பயன் தரும் அழகிய செடியே!

சிறுநீரக வடிவம் கொண்ட சிறப்பு விதைச் செடியே!

கால்நடைகளின் தீவனமே!

அலங்காரத் தாவரமே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி :பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

முதல்வர்

ஏரிஸ் கலைக் கல்லூரி,

வடலூர்.📱9443405050.