எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்

விழுப்புரம் – செஞ்சி நெடுஞ்சாலையில், விழுப்புரத்திலிருந்து சுமார் 18 கி.மீ.தொலைவில் நேமூர் கிராமம் உள்ளது.
அங்கிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலுள்ள எண்ணாயிரம் கிராமத்தில் தான் நரசிம்மர் அருள் பாலிக்கிறார்.
இந்தத் தலத்தில்
ஸ்ரீ மகாலட்சுமியைத் தன் மடி மீது அமர்த்திய கோலத்தில், தமது திருப்பெயருக்கேற்ப அழகிய வடிவில் புன்னகை தவழும் திருமுகத்துடன் காட்சி தருகிறார் ஸ்ரீஅழகிய நரசிம்மர்.
சுவாதி நட்சத்திரத் திருநாளில் இந்த ஆலயத் துக்கு வந்து, ஸ்ரீஅழகிய நரசிம்மரைத் தரிசித்து வழிபட்டால், நம் எண்ணங்கள் யாவும் ஈடேறும்; விரும்பிய வரங்கள் விரைவில் கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு.
Patrikai.com official YouTube Channel