வாஷிங்டன்.
பயங்கரவாதிகளை அழிக்க நிதி வாங்கிகொண்டு பயங்கரவாதிகளை ஒழிக்காமல் பாகிஸ்தான் நாடகமாடுவதாக அமெரிக்க மந்திரி குற்றம் சாட்டி உள்ளார்.
பயங்கரவாத குழுக்களை அழிக்காவிட்டால் நாங்களே களம் இறங்குவோம் என்று பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிகை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வளர்த்து வருகிறது. அவர்களை கொண்டு இந்தியா மீது மறைமுக போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதை இந்தியா ஐ.நா. சபை மூலம் உலக நாடுகள் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
கடந்த மாதம் பயங்கரவாதிகளை கொண்டு காஷ்மீர் எல்லையில் அமைந்துள்ள உரி ராணுவ முகாமை தாக்கியது. இதில் 19 இந்திய வீரர்கள் பலியானார்கள். இதனால் இந்தியா, பாகிஸ்தான் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியது. அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தது.
இதன் காரணமாக அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் பாகிஸ்தானின் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான நிலைக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இந்த நிலையில், அமெரிக்காவின், தீவிரவாத நிதி தடுப்பு துணை மந்திரி ஆதம் சுஸூபின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. நடவடிக்கை எடுக்க மறுத்தால் நாங்களே களம் இறங்கி பயங்கரவாத குழுக்களை அழிக்க நேரிடும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்க கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக அளவில் பயங்கரவாத எதிர்ப்பு போரில் பாகிஸ்தானும் இணைந்துள்ளது. அதனால் பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்க பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்கவிடம் இருந்து நிதி உதவி பெற்றுக்கொண்டு பயங்கரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதில்லை என்று அமெரிக்க கருதுகிறது.
இதனால் பாகிஸ்தான் மீது அமெரிக்கா கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
பயங்கரவாத அமைப்புகளுக்கு, பாகிஸ்தான் ராணுவ உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதை நாங்கள் ஏற்க முடியாது.
பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. பயங்கரவாத குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்தால் நாங்களே களம் இறங்கி பயங்கரவாத குழுக்களை அழிக்க நேரிடம் என்று பாகிஸ்தானுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.