சென்னை: பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு ஆட்சியாளர்களிடம் பலமுறை கோரிக்கை வைத்தாலும் எந்த பயனும் இல்லை என தவெக தலைவர் விஜய்  தனது கைப்பட கடிதம் எழுதி உள்ளார்.

அதில்,  தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நடப்பதாகவும், . சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அவலங்களை கண்டு வேதனை அடைந்துள்ளதாவும்,பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம் என  சம்பவம் நடைபெற்று 6 நாட்கள் கழித்து தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 23ஆம் தேதியன்று நடைபெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். டிசம்பர் 25ஆம் தேதி, இந்த வழக்கு தொடர்பாக திமுகவைச் சேர்ந்த நபர்  ஞானசேகரன் என்ற நபர் கைது செய்யப்பட்டு அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என கருதப்படும் நிலையில், இது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்த நிலையில்,

 பாதிக்கப்பட்ட  பெண் கொடுத்த புகார் தொடர்பாகப் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை (FIR), அதாவது காவல்துறையின் பாதுகாப்பில்  இருந்த எஃப்ஐஆர்,  டிசம்பர் 26ஆம் தேதி, காலையில் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தப் பெண்ணுக்கு நடந்த அசம்பாவிதங்கள் பற்றிய விரிவான தகவல்கள் மட்டுமின்றி அந்தப் பெண்ணின் பெயர், அலைபேசி எண், படிக்கும் பாடப்பிரிவு, முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. சில தொலைக்காட்சி நிறுவனங்கள் அந்தப் பெண்ணின் தனிப்பட்ட விவரங்கள் தவிர்த்து, எந்தெந்தப் பிரிவுகளில் குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் அடங்கிய எஃப்.ஐ.ஆரை ஒளிபரப்பின.

பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளான பெண்கள் தொடர்பான பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வெளியிடக் கூடாது என சட்டமற்றும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்கள் பலமுறை அறிவுறுத்திய நிலையில், காவல்துறை, எஃப்ஐஆர் காப்பியை வெளியானது டெக்னிக்கல் பால்ட் என கூறியதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பெண் குழந்தைகள், தங்கைகள், தாய்மார்கள் உள்ளிட்டோருக்கான பாதுகாப்பை யாரிடம் கேட்பது என கேள்வி எழுப்பிய விஜய், ஆட்சியாளர்களிடம் கோரிக்கை வைத்து எந்த பயனுமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சுமார் சம்பவம் நடைபெற்று 6 நாட்கள் கழிந்துள்ள நிலையில், இன்று பெண்களுக்கு கடிதம் மூலம் தனது வருத்தத்தை தெரிவித்து உள்ளார். அதுவும், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் பலாத்காரத்தை குறிப்பிட்டு சொல்லாமல், பொத்தாம் பொதுவாக விமர்சனம் செய்துள்ளார்.

தவெக தலைவரும் நடிகருமான விஜய் கைப்பட எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

 “அன்பு தங்கைகளே கல்வி வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், எனதருமை தங்கைகள், குழந்தைகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளை கண்டு உங்கள் அண்ணனாக மன அழுத்தத்துக்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன்.

யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்த பயனுமில்லை என்பது தெரிந்ததே.

அதற்காகவே இந்தக் கடிதம். எல்லா சூழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன்.

அண்ணனாகவும் அரணாகவும். எனவே எதை பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள்.

பாதுகப்பான தமிழ்நாட்டை படைத்தே தீருவோம். அதற்கான உத்திரவாதத்தை நாம் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்” 

– உங்கள் அண்ணனாக பிரியமுடன் விஜய்.”

மிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். GOAT படத்தில் நடித்து முடித்துவிட்டு இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என்று அறிவித்திருக்கும் அவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 69ஆவது படத்தில் நடித்துவருகிறார். அதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும், பாபி தியோல் வில்லனாகவும் நடிக்கிறார்கள்.

விஜய்யின் கடைசி படம் அது என்பதால் எப்படியாவது மெகா ஹிட்டாக அமைந்துவிட வேண்டும் என்பதில் அவரது ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

ஒருபக்கம் தனது கடைசி படத்தில் நடித்துவரும் அவர் மறுபக்கம் அரசியல் மேடையிலும் சுற்றி சுழன்றுவருகிறார்.

முதலில் விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்திய அவர்; தமிழ்நாட்டில் திமுகதான் தங்கள் அரசியல் எதிரி என்று பிரகடனப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக திமுகவினரும் தங்களது கருத்தினை காட்டமாக முன்வைத்து வருகிறார்கள். முக்கியமாக Work From Home அரசியல் அவர் செய்கிறார் விஜய் என்று விமர்சிக்கின்றனர்.

அடுத்ததாக எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட விஜய் அந்த மேடையிலும் திமுகவை விமர்சனம் செய்தார். இதனால் விஜய் Vs திமுக என்கிற நிலை தீவிரமடைந்திருக்கிறது.

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை என சூளுரைத்த டிஜிபி அருண், அண்ணா பல்கலை. பாலியல் விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்?