டில்லி:

மார்ச் 5-ம் தேதி மத்திய வரவுசெலவுத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் பாராளுமன்றம் தொடர் அமளி காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள்,  ஆந்திராவுக்கு தனி அந்தஸ்து கேட்டு தெலுங்கு தேசம்கட்சி எம்.பி.க்கள், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் பிஎன்எப் முறைகேடு தொடர்பாக அமளி செய்து வருவதால் தொடர்ந்து இரு அவைகளும்ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நேற்றைய கூட்டத்தை எந்தவித இடையூறு இல்லாத நிலையிலும் சில நிமிடங்கள் ஒத்தி வைத்தார். சபையில் போதுமான உறுப்பினர்கள் இல்லாததால் சபை ஒத்தி வைக்கப்பட்டுதாக அறிவித்தார்.

சமீபத்தில், ராஜ்யசபாயில் நடைபெற்ற அமளி குறித்து கருத்துகூறிய ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு, கடந்த இரண்டு வாரங்களாக விவாதங்களை கையாள முடியாமல்  மிகவும் வேதனை அடைவதாகவும், அமளியில் ஈடுபட்டு வரும்  நாடாளுமன்ற உறுப்பினர்களையும்  கடுமையாக விமர்சித்தார்.

“தயவு செய்து தயவுசெய்து பொறுமையா இருங்கள். என் பொறுமையை சோதிக்க வேண்டாம். மக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம். மக்கள் மயக்கமடைந்து வருகின்றனர்,  மங்களுக்காக நாம் எதுவும் செய்யவில்லை என்றும், இதற்காக வருந்து வதாகவும்  அவர் கூறினார்.

நாயுடு பேசியதும், காங்கிரஸ் எம்.பி. சதுர்வேதி பேசினார். அப்போது, உறுப்பினர்கள்  கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட விஷயங்களைப் பற்றி கருத்து வேறுபாடுக்கு இடமில்லை. “நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் இது உங்கள் அரசியல் மற்றும் பாராளுமன்ற வாழ்க்கையில் முதல் தடவையாக இருக்கிறதா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அப்போதைய காட்சிகளைப் பற்றிய குறிப்புகளை சுட்டிக்காட்டிய அவர், கடந்த ஆட்சியின்போது, பாஜக எம்.பி.க்களை வழிநடத்தி வந்தபோது,  “யாராவது சில தவறுகளை செய்திருந்தால், நானும் செய்வேன் … இந்த வகையான விஷயம் தொடர வேண்டும் என்று நீங்கள் கூறிய ஆலோசனையை நினைவு படுத்தினார்.

மேலும் போதைய காலங்களில் ஒரு மாதம் முழுவதும் பாராளுமன்றம் இயங்கவில்லை என்று சதுர்வேதி வாதிட்டபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த வெங்கையா நாயுடு,   தற்போதைய நிகழ்வுகள் குறித்து மக்கள் பேசுகிறார்கள் என்று கூறினார்.

இதை ஆமோதித்த அவர் தொடர்ந்து சபையை சில நிமிடங்கள்  ஒத்தி வைத்தார்.

இதனிடையே கடந்த  புதன்கிழமை, நிதி மசோதா பாராளுமன்றத்தில் எதிர்ப்புக்களுக்கு இடையே நிறைவேற்றப்பட்டது, விவாதங்களைத் தவிர்ப்பதற்காக “கில்லிட்டீன்” என்று அழைக்கப்படும் அரிதாக பயன்படுத்தப்படும் நாடாளுமன்ற நடைமுறையின்படி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.