
தேசிங் பெரியசாமி இயக்கத்தில் பிப்ரவரி 28-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ .
இந்தப் படத்தின் தொடக்கத்திலேயே ரஜினிக்கு நன்றி தெரிவித்திருப்பார் இயக்குநர் தேசிங் பெரியசாமி. அந்த அளவுக்குத் தீவிரமான ரஜினி ரசிகர் அவர் .
தற்போது ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் தேசிங் பெரியசாமியை தொலைபேசி வாயிலாகப் பாராட்டியிருக்கிறார் ரஜினி.
இந்த தொலைபேசி உரையாடல் லீக்காகிவிட்டது. இது ட்விட்டர் தளத்தில் வைரலாகி பரவி வருகிறது.
இது தொடர்பாக இயக்குநர் தேசிங் பெரியசாமி தனது ட்விட்டர் பதிவில்
— Desingh Periyasamy (@desingh_dp) July 30, 2020
வாழ்த்து தெரிவித்த எல்லாருமே “என்கிட்டயே தலைவர் பேசுனது மாதிரி அவ்வளவு சந்தோஷம்னு சொல்றாங்க”. உங்களுடைய அன்புக்கு நன்றி. ஆனால், தனிப்பட்ட முறையில் போன் உரையாடல் லீக்கானதில் சந்தோஷம் இல்லை. ஏனென்றால் அது மிகவும் பெர்சனலான தொலைபேசி உரையாடல்” என பதிவிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]