டில்லி,

ங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் இன்று முதல் நீக்கப்பட்டுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

பட ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பிறகு, வங்கிகளில் உள்ள பணத்தை எடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

பணத்தட்டுப்பாடு காரணமாகவே பணப்புழக்கம் தடைபட்டது, இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் ஜனவரி முதல் கட்டுப்பாடுகள் சிறிது சிறிதாக தளர்த்தப்பட்டு வந்தது.

இருந்தாலும் சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுப்பது வாரத்திற்கு 20 ஆயிரம் என்றே இருந்தது. அந்த கட்டுப்பாடும் இன்றுமுதல் முழுவதுமாக நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்நிலையில் வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் வாரத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் எடுக்க முடியும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஆனால், இன்னும் பணத்தட்டுப்பாடு நீடித்து வரும் நிலையில், நாம் கேட்கும் அளவுக்கு பணம் கொடுக்கும் அளவுக்கு பெரும்பாலான வங்கிகளில் பணம் இல்லை என்றே கூறப்படுகிறது.

இந்த பணத்தட்டுப்பாடும் இன்னும் ஓரிரு வாரத்தில் சீராகும் என்றும் வங்கி அதிகரிகள் கூறியுள்ளனர்.