சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆயுட்காலம் முடிவடைய உள்ளதால், விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழக நிதிஅமைச்சரான துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இன்றைய பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக 15-வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். இதையொட்டி, தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் கடைசி வாரத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், 2021-22 நிதியாண்டின் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழக சட்டசபையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார்.
எடப்பாடி அரசின் இறுதி பட்ஜெட் என்பதால், தேர்தலை முன்னிட்டு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண்கள், மாணவர்கள், இளைஞர்களுக்கான பல்வேறு புதிய திட்டங்கள் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட இருப்பதாகவும் கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கினற்ன.
பட்ஜெட் தாக்கலுக்குப் பின், பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூடி, எத்தனை நாட்கள் கூட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்யும். அதனப்டி சட்டபேரவை கூட்டத்தி தொடர்ந்து 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 3 நாட்கள் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.