சென்னை:  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உதயநிதிக்கு துணைமுதலமைச்சர் பதவி? மற்றும்  முதலமைச்சரின் 15 நாள் வெளிநாட்டு பயணம் குறித்து விவாதி்ககப்பட உள்ளது.

தலைமைச்செயலகத்தில் உள்ள கூட்டரங்கில், முதல் அமைச்சர் முகஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக்கூட்டம்  இன்று காலை 11 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் 15 நாள் பயணமாக  அமெரிக்காசெல்ல உள்ள நிலையில், முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமெரிக்கா செல்கிறார் முதல்வர் முகஸ்டாலின். இந்த கூட்டத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட உள்ள சலுகைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.  மேலும்,  தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களுக்கு சலுகைகள் இதில் முதல் அமைச்சரின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. மேலும் அமைச்சரவை மாற்றம், உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி உள்பட பல்வேறு அரசியல் நிகழ்வுகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது.

இன்றைய கூட்டத்தில்,  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அனைத்து துறை அமைச்சர்களும் பங்கேற்று உள்ளனர். இந்த கூட்டம் முடிந்ததும், பல்வேறு அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க 15 நாள் பயணமாக வரும்  27-ம் தேதி அமெரிக்கா செல்கிறார். அங்கு கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்பட பல தொழலிதபிர்களை  சந்திக்க இருக்கிறார்.