சென்னை: வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதால், கடலுக்கு சென்ற மீனவர்கள் 9ந்தேதிக்குள் கரை திரும்ப அறிவுறுத்தி இருப்பதுடன், மீனவர்கள் 10ந்தேதி முதல் 3 நாட்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 9ந்தேதி உருவாக உள்ளதால், நவம்பர் 10,11,12 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல், தமிழக – ஆந்திர கடலோர பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவித்து உள்ளது.
வங்கக்கடலில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்களும் வரும் 9-ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான பின், வடகடலோர மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]