டில்லி,

ட மாநிலங்களில் நிலவி வரும் உறைபனி மற்றும் கடுங்குளிர் காரணமாக பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். அதே வேளையில், பனி காரணமாக விபத்துக்களும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில டில்லியில் நிலவும் கடும் பனி காரணமாக ஜனவரி 1 முதல் 7ந்தேதி வரை 44 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தலைநகர் டில்லியில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாக போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தினசரி 20க்கும் மேற்பட்ட விமான சேவைகள் மாற்றி அமைக்கப்பட்டும், ஏராளமான ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டும், பல ரெயில் சேவைகள் மாற்றி அமைக்கப்பட்டும் வருகின்றன.

அதே வேளையில் பனி மூட்டம் காரணமாக சாலையில் செல்லும் வாகனங்களின் விபத்தும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் புத்தாண்டு பிறந்து ஒரு வாரமே ஆகி உள்ள நிலையில் குடுங்குளிர் மற்றும் பனி காரணமாக 44 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

2018ம் ஆண்டு ஜனவரி 1ந்தேதி முதல் 7ந்தேதி வரையிலான 7 நாளில் மட்டும் 44 பேர் பனி மற்றும் குளிர் காரணமாக பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடுகுளிர் காரணமாக டில்லி அருகே உள்ள  உ.பி.யில் இந்த ஆண்டு இதுவரை  70 பேர் பலியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

https://patrikai.com/shivers-below-6-degrees-cold-wave-claims-70-lives-in-uttar-pradesh/