உலகின் முன்னணி படவிளக்க மென்பொருளான பவர் பாயிண்ட்-டை உருவாக்கிய டென்னிஸ் ஆஸ்டின் காலமானார். அவருக்கு வயது 76.

1985 முதல் 1996 வரை பவர் பாயிண்ட்-டின் முதன்மை மேம்பாட்டு அதிகாரியாக பதவி வகித்த ஆஸ்டின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

பவர் பாயிண்ட்-டை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்குவதற்கு முன்பே அதன் உருவாக்கிய குழுவில் இடம்பெற்ற ஆஸ்டின் 1996 ம் ஆண்டு உடல்நிலை காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஆல்டோஸ் நகரில் வசித்து வந்த அவர் இன்று மரணமடைந்தார்.

இவர் உருவாக்கிய பவர் பாயிண்ட் மென்பொருள் இன்றளவும் அனைத்து அலுவலகங்களிலும் தங்களைப் பற்றிய சுயவிளக்க விவரங்களை விவரிக்க பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.