கோபன்ஹேகன் :
முகத்தை மறைக்கும் வகையில் பர்தா உள்ளிட்ட ஆடைகள் அணிய டென்மார்கில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை குறித்த சட்ட மசோதா இன்று டென்மார்க் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 75 உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து இச்சட்டம் நிறைவேறியது. இதற்கு 30 பேர் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனர்.
இதன் மூலம் டென்மார்க்கில் இனி பொது இடங்களில் முகத்தை திரையிட்டு மறைத்தாலோ அல்லது முகத்தை மறைக்கும் வகையிலான பர்தா அணிந்து இருந்தாலோ அபராதமும், தண்டனையும் விதிக்கப்படும். ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமல் இச்சட்டம் அமலுக்கு வருகிறது.
முன்னதாக 2 பேர் நேருக்கு நேர் சந்தித்துக்கும் போது ஒருவர் முகத்தை மறைத்திருப்பது அவமதிக்கும் செயலாகும். அதனால் முகத்தை திரையிட்டு மறைக்கும் பழக்கத்திற்கு தடை விதிக்கப்படும் என்று டென்மார்க் நீதித்துறை அமைச்சர் சோரப் பாப் பால்சன் கடந்த பிப்ரவரியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.