கோலாலம்பூர்:

மலேசியா பிரதமர் மகாதிர் முகமது குறித்த திரைப்படம் தயாரிக்க பாலிவுட் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.

72 வயதாகும் பாலிவுட் தயாரிப்பாளரான ராமன்குமார் கூறுகையில்,‘‘ 1981 முதல் 2003ம் ஆண்டு வரை பிரதமராக இருந்த மகாதிர் முகமதுவின் 22 கால அரசியல் அனுபவம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை குறித்தும், மீண்டும் பிரதமர் பதவியை பிடித்தது குறித்தும் இந்த படம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தை நானே இயக்கி தயாரிக்கவுள்ளேன். 92 வயதாகும் மகாதிர் மலேசியாவை ஒன்றிணைத்துள்ளார். இது அவருக்கும் அவரது பிரம்மாண்ட கூட்டணிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்’’ என்றார்.

ராமன் இது வரை 10 படங்கள் தயாரித்துள்ளார். இதில் 5 படங்கள் மலேசியாவில் தயாரானது.