சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான  சத்யமூர்த்தி பவனில் வசந்த குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்காததால், தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, உடனே சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

கொரோனா பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டு, அதில் இருந்து குணமடைந்து, மற்ற நோய் காரணமாக உயிரிழந்த  குமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி.யும், தொழிலதிபருமான  வசந்தகுமார் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு ஆம்புலன்சில் மூலம் இன்று காலை 5.30 மணி அளவில்,  சென்னை தி.நகர் நடராஜன் தெருவில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அவரது உறவினர்கள், நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள், வியாபாரிகள், அரசியல் கட்சி யினர்  அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரியும் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக, வசந்தகுமாரின் உடல் இன்று காலை 10.30 மணிக்கு சாத்தியமூர்த்தி பவனில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கைப்படும் என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் நிர்வாகிகள், தலைவர்கள் அஞ்சலி செலுத்த சாத்தியமூர்த்தி பவனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், திடீரென அவரது உடல் அங்கு வைக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தேனாம் பேட்டை காமராஜர் அரங்கத்திற்கு  கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதாக கூறப்படு கிறது.

இதையடுத்து, அவருடைய உடல் மதியம் 12மணி அளவில், அவரது  சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  அகஸ்தீஸ்வரத்திற்கு கொண்டு செயல்படுகிறது.

நாளை காலை 10 மணி அளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.