தேவையற்ற முறையில் அசுத்த நீர் தேங்குபடிச் செய்வது உட்பட கொசுக்கள் தங்கும்படியாக நடந்துகொள்பவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயககுநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழகம் முழுதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் அதிகரித்து வருகிறார்கள். இது குறித்து  தமிழக பொது சுகாதாரத்துறை இயககுநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளதாவது:

“டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க பல்வேறு தடுப்பு முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.  டெங்கு காய்ச்சல் ஏடிஸ் என்ற வகை கொசுக்களால் பரவுகிறது. இந்த கடித்த ஏடிஸ் கொசுக்கள் மற்றவர்களை கடிக்கும் போது அவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இந்த கொசுக்கள் 500 மீட்டர் தொலைவுக்குள் பறக்கும் என்பதால் ஓரிடத்தில் டெங்கு காய்ச்சல் இருந்தால் மற்றவர்களுக்கும் பரவும்

 

டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை அழிக்க பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். வீடுகள் மற்றும் தோட்டங்களில் டயர்கள், தேங்காய் ஓடுகள், பாட்டில்கள் போன்றவற்றில் நல்லதண்ணீர் தேங்க விடாதீர்கள்.

ஏனெனில் டெங்கு வைரஸ்களை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் நல்ல தண்ணீரில் தான் முட்டையிட்டு பெருகுகின்றன. அந்த முட்டைகள் ஒருவாரத்துக்குள் கொசுக்களாகி விடும்.

ஆகவே வாரத்துக்கு ஒருமுறை பாத்திரங்கள், தண்ணீர் தொட்டிகளை கழுவி ஊற்றுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் டெங்கு கொசுக்களை முட்டை, கொசுப்புழு பருவத்திலேயே அழித்து விடலாம்.

அதே நேரம் தேவையற்ற முறையில் அசுத்தமான நீரைத் தேங்க வைத்து, கொசுக்கள் வளர காரணமாக இருப்பவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும்” என்று குழந்தைசாமி தெரிவித்தார்.