டில்லி,
நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டு, 50 நாட்கள் இன்றோடு முடிவடைகிறது. இதனால் மத்திய அரசு எதிர்பார்த்த நடவடிக்கைகள் நிறைவேறியதா என்று
கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதை தொடர்ந்து கையில் இருப்பு உள்ள பணத்தை  வங்கிகளிலும் டெபாசிட் செய்யும்படியும், புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும் என்றும்,  அவசர தேவைக்காக 4000 ரூபாய் மட்டும் உடனடியாக மாற்றி கொடுக்கப்படும் என்றும் பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் டிசம்பர் 30ந்தேதி வரைதான் பழைய பணம் மாற்ற முடியும் என்றும் கூறியது.

மேலும் வங்கிகளில் இருந்து பணம் எடுக்க குறைந்தபட்ச தொகை நிர்ணயம் செய்யப்பட்டது. குறிப்பிட்ட அளவுக்குமேல் பணம் எடுத்தாலோ அல்லது டெபாசிட் செய்தாலோ கணக்கு காட்ட வேண்டும் என்றும் எச்சரித்தது.
இதன் காரணமாக நாட்டில் பணப்புழக்கம் தடைபட்டது. சாமானிய மக்கள் செலவுக்கு பணமின்றி திண்டாடினர். ஆனால், பெரும் தொழிலதிபர்கள், வங்கி அதிகாரிகளை கையில் வைத்துக்கொண்டு தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை மாற்றிக்கொண்டனர்.
இதனால், வங்கிகளில் பொதுமக்களுக்கு தேவையான பணம் கொடுக்க முடியாமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பல இடங்களில் வங்கிகள் தாக்கப்பட்டது. மக்கள் காலை முதல் மாலை வரை வங்கியின் முன் காத்திருக்கும் அவலம் நிலவி வருகிறது.
மோடியின் பணம் செல்லாது அறிவிப்பு வெளியாகி 50 நாட்கள் இன்றோடு முடிகிற நிலையில் பண பண மதிப்பிழப்பு குறித்து பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்…
இதுவரை எந்த அரசும், இப்படியொரு  அதிரடி நடவடிக்கை எடுக்கவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்த மக்கள், மோடியின் நடவடிக்கைக்கு ஆதரவு அளித்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.
வங்கிகள் முன்பும், ஏடிஎம் வாசல்களிளும் நிற்கும்போது ஏற்பட்ட வேதனை  காரணமாக மாற்று கருத்து  தெரிவித்தாலும், இந்த நடவடிக்கையால் நாட்டில் மாற்றம் நிகழும் என்று நம்பினார்கள்.

அதுபோல் மாற்றம் நிகழ்ந்துள்ள செயல்களை பார்ப்போம்.
நவம்பர் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை சுமார் 1.77 லட்சம் பேர், தாங்கள் வங்கிகளில் வாங்கிய ரூ.25 லட்சம் வரையிலான கடன் தொகைகளை பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அடைத்துள்ளனர்.
இதன் மூலம் பெறப்பட்ட மொத்த கடன் தொகை ரூ.50ஆயிரம் கோடி.
பழைய ரூபாய் நோட்டுகளை கொண்டு அதிக அளவில்  வருமான வரி தொகை செலுத்தப்பட்டு உள்ளது.
வங்கிகளில் அதிக பணத்தை டெபாசிட் செய்த சுமார் 5 ஆயிரம் பேருக்கு வருமான வரித்துறை யினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
நவம்பர் 8ம் தேதி முதல் நாடு முழுவதும் 983 அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. நவம்பர் 8ம் தேதிக்கு பின் வருமான வரித்துறையினரால் ரூ.4,172 கோடி மதிப்புள்ள சொத்து மற்றும் பெரிய அளவிலான தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
பல பெரும் புள்ளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சேதனை நடத்தினர்.
கருப்பு பண பதுக்கல், ஆங்காங்கே நடைபெற்ற சோதனையின்போது பிடிபட்ட கோடிகணக்கான ரூபாய் பதுக்கல் பண போன்றவை,  மோடியின் நடவடிக்கை காரணமாகவே வெளியே வந்தது.
நிலைமை சரியாக இன்னும் சில நாட்கள்  காலக்கெடு வேண்டுமென்றால் சற்று நீட்டிக்கப்படலாம். ஆனால், உண்மையில் நடந்தது  அனைத்தும் நல்லவையே…
இனி நடக்கப்போவதும் நல்லவையாகவே அமையே வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.