காத்மண்டு:
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பால் இந்திய மக்கள் மட்டுமின்றி நேபாள மக்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நடைமுறையில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதம் 8ம் தேதி அறிவித்திருந்தார். இது இந்திய மக்களுக்கு பேரிடியாக இருந்தது. தற்போது இதன் தாக்கம் அண்டை நாடான நேபாளத்திலும் எதிரொலிக்கிறது.
இந்த அறிவிப்பு வந்தது முதல் இந்தியாவுடனால அந்நாட்டு வர்த்தகம், சுற்றுலா உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது என்று பிஎம்ஐ ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியட்டுள்ளது. ஏற்கனவே பூகம்பத்தில் சிக்கி த டுமாறி கொண்டிருந்த நேபாளத்தை மோடியின் இந்த அறிவிப்பு, முற்றிலும் நிலைகுலைய செய்துள்ளது.
கடந்த 2015-16ம் நிதியாண்டில் 0.8 சதவீத வளர்ச்சியுடன் 21 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார நெருக்கடியை அந்நாடு ச ந்தித்துள்ளது. மோடியின் அறிவிப்பு சுற்றறிக்கையாக அந்நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டிலும் இந்த ரூபாய் நோட்டுகளை வாங்க வங்கிகள் மறுத்து வருகிறது. இதனால் தொழில், சுற்றுலா, வேலைவாய்ப்பு என அனைத்து வகையிலும் நேபா ளம் தடுமாற்றத்தை சந்தித்து கொண்டிருக்கிறது.