டில்லி

டந்த 2017 ஆம் ஆண்டு அருண் ஜெட்லியிடம் தேர்தல் நிதிப்பத்திரங்களால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடையும் என உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பைக் கொண்டு வந்த பிரதமர் மோடி இந்த நடவடிக்கை கருப்புப் பண ஒழிப்புக்காக அமலாக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.   அதன்படி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாதவை ஆகியதால் அதை மாற்ற மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.  ஆயினும் ரிசர்வ் வங்கியில் அப்போது புழக்கத்தில் இருந்து அனைத்து நோட்டுக்களும் திரும்ப வந்து விட்டன.

இந்நிலையில் மத்திய அரசால் 2017  ஆம் ஆண்டு தேர்தல் நிதிப்பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.   இந்த பத்திரங்கள் பாரத ஸ்டேட் வங்கியின் ஒரு சில  கிளைகளில் மட்டும் வாங்க முடியும்.   இதை ஒரு தனி நபர் மற்றும் எந்த ஒரு நிறுவனமும் வாங்கலாம்.   இந்த பத்திரங்களில் வாங்கியவர் பெயர் இருக்காது.  இதைக் கட்சிகளுக்கு வங்கிகள் மூலமாகவே நன்கொடையாக அளிக்கலாம்.

இந்த நன்கொடையை வழங்குபவர் யார் என அரசியல் கட்சிகளுக்குத் தெரியாது.   ஆயினும் இந்த தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி விலக்கு உண்டு.   தற்போது இந்த வருமானத்துக்கு வரி விலக்கு இருந்த போதிலும் தேர்தல் ஆணையத்துக்கு விவரங்கள் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.

தகவல் ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் அளித்த கேள்விக்குக் கிடைத்த பதிலின்படி கடந்த 2017ஆம் வருடம் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் இது குறித்து அப்போதைய நிதி அமைச்சர் அமித் ஷா அனுப்பியுள்ள கடிதம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.  அந்த கடிதத்தில் உர்ஜித் படேல், “ஒரு வங்கிக்கு கரன்சி நோட்டுக்கு இணையான  பத்திரங்கள் வழங்க அனுமதிப்பது சர்ச்சைக்குரியதாகும்.

ரிசர்வ் வங்கிக்கு மட்டுமே இவ்வாறு நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் வெளியிடும் உரிமை உண்டு.  அந்த உரிமையை இந்த செயல் மூலம் பறிக்கப்படுகிறது.   எனவே ரிசர்வ் வங்கி அல்லாத மற எந்த வங்கியும் இது போல் பத்திரங்கள் வெளியிடுவதன் மூலம் பொருளாதார நிலை கடுமையாகப் பாதிக்கப்படும்.

அத்துடன் இதைப் பல ஷெல் நிறுவனங்கள் பயன்படுத்தி தங்கள் கருப்புப்பணத்தை மாற்ற முயலும்.  இதனால் பல பண மோசடிக் குற்றங்கள் நிகழ வாய்ப்புண்டு.  நாட்டில் நிலவும் நோட்டுப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்த தேர்தல் நிதி பத்திர திட்டம் மூலம் தோல்வி அடையும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்துக்கு முன்னாள் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பதில் அளிக்கவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.