இந்தியாவை பின்பற்றி பாகிஸ்தானிலும் உயர் மதிப்புடைய நோட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என அந்நாட்டு செனட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் உயர் மதிப்புடைய நோட்டான 5000 ரூபாய் நோட்டை செல்லாது என அறிவிக்க அந்நாடு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. கறுப்புப்பண பதுக்கலை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை அந்நாட்டின் செனட்டர் சைஃப் உல்லா கான் முன்மொழிந்திருக்கிறார். இதை பலரும் ஆதரித்திருப்பதாக தெரிகிறது.
ஆனாலும் இந்தியா செய்தது போல அல்லாமல் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுக்கணக்கில் படிப்படியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது பொதுமக்களுக்கு சற்று சிரமத்தை தரும் நடவடிக்கைதான், 5000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்வதால் மக்கள் அதற்கு மாற்றாக வெளிநாட்டு கரன்சிகளை உபயோகப்படுத்தக்கூடும் என்று அந்நாட்டு சட்ட அமைச்சர் சாகித் ஹமீத் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் தற்பொழுது பாகிஸ்தானில் 3 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளதாகவும் அதில் 1 லட்சத்து 2 ஆயிரம் நோட்டுக்கள் 5000 ரூபாய் நோட்டுக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Demonetisation in Pakistan Senate passes resolution to withdraw Rs 5000 note