புதுடெல்லி:

பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சி 6.5% குறைந்துள்ளது.


2017-18-ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக குறைந்தது. இது இதற்கு முந்தைய ஆண்டைவிட 0.06 சதவீதம் குறைவாகும்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு பிறகு பாஜக அரசில் இது குறைந்தபட்ச வளர்ச்சியாகும்.

இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி தொடர்பான முதல் முன் மதிப்பீட்டை மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டது.
அதில், விவசாய விரிவாக்கம் கடந்த ஆண்டை விட பாதியாக குறையும். விவசாய உற்பத்தி விலையும் வீழ்ச்சியடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார சர்வேயின்படி, உள்ளூர் ஒட்டுமொத்த உற்பத்தி விகிதம் 6.75-7.5 சதவீதத்துக்கு குறைவாக இருந்தாலும், 2013-14 ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த 6.4 சதவீதம் உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தியைவிட சற்று அதிகமாகும்.