மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய்களை தடை செய்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் அதனால் ஏற்பட்ட மோசமான பின்விளைவுகளை சொல்லும் காணொளி இது. ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டினால் வேலை இழந்து சாரிசாரியாக தங்கள் ஊர்களுக்கு திரும்பிச் செல்லும் ஏழை மக்களிடம் த வயர் எனும் இணைய பத்திரிக்கை பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளது.
இடம்: டெல்லி ரயில்வே நிலையம்
காணொளியில் பேசும் மக்கள் “எந்த கடையில் போய் 500 ரூபாயை கொடுத்தாலும் வாங்க மறுக்கிறார்கள். எங்களுக்கு வேலை இல்லை, வேலை இருந்தாலும் எங்கள் முதலாளியிடம் சம்பளம் கொடுக்க பணம் இல்லை. இந்நிலையில் உண்ண உணவு, அழுக்கான துணிகளை சலவை செய்ய சோப்பு கூட வாங்க இயலாத நிலையில் ஊருக்கு திரும்பி செல்லுகிறோம். இதுதான் மோடி அரசு செய்த சாதனை” என்று புலம்புகின்றனர்
Patrikai.com official YouTube Channel