மும்பை: வீதி மீறி கட்டியதாக கூறி, நடிகை கங்கனா ரனாவத்தின் பங்களாவை அவசரம் அவசரமாக இடித்ததற்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நடிகை கங்கனா, மகாராஷ்டிர மாநில அரசு மீது தொடர்ந்த வழக்கில், மும்பை உயர்நீதிமன்றம், மாநில அரசு மற்றும் மும்பை மாநகராட்சியின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தது.
பாலிவுட் திரையுலகில் நிகழும் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக, நடிகை கங்கனா கருத்து தெரிவித்ததால், அவருக்கும், ஆட்சி செய்யும் உத்தவ்தாககரே அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கங்கானா மும்பை வரமுடியாது என சிவசேனா பகிரங்க மிரட்டல் விடுத்தது. இதையடுத்து, அவர் மத்தியஅரசை நாடிய நிலையில், அவருக்கு மத்தியஅரசு இசட்பிளஸ் பாதுகாப்பு வழங்கியது. அந்த பாதுகாப்புடன் மும்பை வந்து கவர்னரை சந்தித்து மாநில அரசு மீது புகார் கொடுத்தார்.
இதனால் கடும் கோபமடைந்த தாக்கரே அரசு, மும்பை மாநகராட்சி மூலம் குடைச்சல் கொடுக்கத் தொடங்கியது. மும்பையில் உள்ள கங்கனா ரனாவத்தின் வீட்டில், அனுமதியை மீறி படிக்கட்டுக்கு கீழே கழிவறை அமைத்துள்ளதாகவும், வீட்டை அலுவலகமாக மாற்றி இருப்பதாகவும் கூறி நோட்டிஸ் அனுப்பியது. இதை எதிர்த்து கங்கனா கோர்ட்டுக்கு செல்ல, விசாரணை வருவதற்குள் வீட்டின் ஒருபகுதியை மும்பை மாநகராட்சி நிர்வாகம் இடித்து தள்ளியது.
இதை எதிர்த்து, கங்கனா, மும்பை உயர்நீதி மன்றத்தில் ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். அதையடுத்து, கங்கனா வீட்டை இடிக்க நீதிமன்றம் தடை விதித்து. மாநகராட்சியின் நடவடிக்கையையும் கண்டித்தது.
இந்த நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து, கருத்து தெரிவித்த நீதிபதிகள், , மகாராஷ்டிரா மாநில அரசு மற்றும் மும்பை மாநகராட்சியின் நடவடிக்கையாக கடுமையாக விமர்சித்ததுடன், கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தை இடித்திருப்பது மாநில அரசின் தீய உள்நோக்கத்தை தவிர வேறு எதுவும் இல்லை காட்டமாக குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் முப்பை மாநகராட்சி சார்பில், கங்கனா ரனாவத் விசாரணைக்கு ஆஜராக அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ததுடன், கட்டிடம் இடிக்கப்பட்டதற்கு இழப்பீடு வழங்குவது குறித்து மதிப்பிட அதிகாரி நியமிக்கப்பட வேண்டுமெனவும், அந்த அதிகாரி அளிக்கும் அறிக்கையை ஆய்வு செய்த பின்னர் எவ்வளவு இழப்பீடு தொகை வழங்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துஉள்ளது.
அதுபோல, சமூகவலைதளத்தில் பிறரை பற்றி கருத்து பதிவிடுகையில் கட்டுப்பாடுடன் கங்கனா நடக்க வேண்டுமெனவும் உயர்நீதிமன்றம் கேட்டு கொண்டது.