உதகை: ஆள்பவர்களால், ஜன நாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்று விமர்சித்துத  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ‘ஜனநாயகன்’  படத்தை முடக்கும் மத்திய அரசின் முயற்சி, தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் தமிழ் மக்களின் குரலை ஒடுக்குவதன் மூலம் மோடியால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது  கூடலூரில் நடைபெற்ற  தனியார் பள்ளி விழாவில் பேசினார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி  ஜன. 13 அன்று தமிழ்நாடு வருகை தந்ததார். நேற்று பிற்பகல் 3 மணியளவில் நீலகிரி மாவட்டத்தின் கூடலூருக்கு வந்துள்ளார். கூடலூரில் காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். கூடலூரில்  நேற்று  மாலை நடைபெற்ற புனித தாமஸ் ஆங்கில மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சிகளில்    கலந்துகொண்டார். பள்ளிக்கு வருகை ராகுல்காந்திக்கு பள்ளி வளாகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு  நடைபெற்ற தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையிலும் பங்கேற்றார். அத்துடன்  ‘சர்க்கரை பொங்கல்’ தயாரிக்கும் பாரம்பரிய நிகழ்வில் கலந்து கொண்டார். பொங்கல் பானையை அவர் துடுப்பால் கிண்டிவிட்டபடி அங்கிருந்தவர்களுடன் உரையாடினார்.  அத்துடன்,  அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமாடி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

பின்னர் மாணவர்களிடையே உரையாடியவர்,  இந்தியா ஒரு ஜனநாயக நாடு, ஆனால் தற்போது ஆள்பவர்களால், ஜன நாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த உரையாடலின்போது, மாணவர்கள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி, போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் குழந்தைகள் அனைவரும், சமூகத்தை பற்றிய அக்கறையும், அறிவையும், வளர்த்துக்கொள்ள வேண்டும். நான் இங்கு வந்தவுடன், சில குழந்தைகளிடம் யார் நல்ல ஆசிரியர் என்று கேட்டபோது, மாணவர்கள் ஆலீஸ் டீச்சர் சொன்னார்கள். ஏன், என்று கேட்டதற்கு ஆலீஸ் டீச்சர் கனிவானவர், அன்பானவர், நாங்கள் கூறுவதை கவனிப்பார் என மாணவர்கள் சொன்னார்கள்.

எனது சண்டையும் அதைப்போன்ற ஒன்றுதான். இந்தியாவை அன்பு நிறைந்த தேசமாக மாற்ற வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். மக்கள் ஒருவர் ஒருவரை மதித்து, மற்ற மதங்களையும், கலாச்சாரங்களையும் மதிக்க வேண்டும் என்று கூறிய நிலையில், ஒரு மாணவர், உங்கள் பள்ளி பருவத்தில் நீங்கள் எப்படிப்பட்ட மாணவர் என கேட்க, நான் மிகவும் குறும்பான மாணவனாக இருந்தேன். நான் சிறுவனாக இருந்தபோது எனது பாட்டி (இந்திரா காந்தி) தான் எங்கள் வீட்டின் தலைவராக இருந்தார். நான் எனது தாய் மற்றும் சகோதரியை பார்த்துதான் வளர்ந்தேன். ஆண்களை விட பெண்கள் சிறப்பானவர் என்று கூறினார்.

தொடர்ந்து இந்தியாவின் ஜனநாயகம் குறித்த மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்த ராகுல்காந்தி, தற்போதைய சூழலில் நாட்டின் ஜனநாயகம் ஆட்சியாளர்களாலே தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்றும், பிரிவினை குறித்து கேள்வி எழுப்பிய மாணவிக்கு, பிறர் மீது அவதூறு பரப்புபவர்கள் தங்களுக்கே தீங்கை விளைவித்துக்கொள்கின்றனர் என பேசியிருந்தார். ராகுல்காந்தியின் நீலகிரி பயணம் குறித்து தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

[youtube-feed feed=1]