பெங்களூரைச் சேர்ந்த ட்ரோன் சேவை நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸ் எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் ட்ரோன்கள் மூலம் பெங்களூரில் ஸ்விக்கி நிறுவனத்திற்கான மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யவுள்ளது.
கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் மனிசர் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் உள்ள ட்ரோன் தயாரிப்பு தொழிற்கூடங்களை இந்த ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“மே முதல் வாரத்தில் பரீட்சார்த்தமாக தொடங்க உள்ள இந்த திட்டம் ஸ்விக்கி நிறுவனத்தின் முன்னோடி திட்டம்” என்று கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் கூறினார்.
முதல் கட்டமாக, POS எனும் விற்பனை மையங்களில் இருந்து ட்ரோன் போர்ட் எனும் மையப்புள்ளிக்கு பார்சல்களை எடுத்துச் செல்லும், அங்கிருந்து ஸ்விக்கி டெலிவரி நபர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.
ஸ்விக்கி நிறுவனத்துக்கு சொந்தமான ட்ரோன் போர்ட் எனும் மையப்புள்ளியின் முகவரி உள்ளிட்ட விவரங்களை அந்நிறுவனம் கருடா நிறுவனத்திற்கு வழங்கும் என்று ஜெயபிரகாஷ் கூறினார்.
இதுகுறித்து ஸ்விக்கி நிறுவனம் தனது இணையதளத்தில், “பெங்களூர் மற்றும் டெல்லி ஆகிய இரண்டு நகரங்களில் ட்ரோன் மூலம் டெலிவரி செய்யும் திட்டம் மேற்கொள்ளப்படும், பெங்களூரில் கருடா ஏரோஸ்பேஸ் மற்றும் டெல்லி-NCR இல் ஸ்கையர் மொபிலிட்டி ஆகிய நிறுவனங்களைக் கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்படும்” என்று பதிவிட்டுள்ளது.
இந்த பரீட்சார்த்த முடிவுகளைக் கொண்டு ANRA-TechEagle Consortia மற்றும் Marut Dronetech Pvt Ltd ஆகிய நிறுவனங்கல் மூலம் அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
இருப்பினும், இதுதொடர்பாக ஏழும் பிரச்சனைகள் மற்றும் வழக்குகளுக்கு யார் பொறுப்பு என்பது குறித்து இரு நிறுவனங்களும் தெரிவிக்கவில்லை என்ற போதும், இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வுகாண தேவையான நடைமுறையை மேற்கொள்ளுமாறு கருடா எரோஸ்பேஸ் நிறுவனம் ஸ்விக்கி நிறுவனத்தை கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.