ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தொகுதிகள் வரையறை முடிவு செய்து  3பேர் கமிட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான மூன்று உறுப்பினர்களைக் கொண்ட எல்லை நிர்ணய ஆணையம் யூனியன் பிரதேசத்தின் எல்லை நிர்ணயம் செய்வதற்கான கையொப்பமிடப்பட்ட இறுதி உத்தரவு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி,  ஜம்மு பிரிவிற்கு 43 சட்டமன்ற தொகுதி களும், காஷ்மீர் பிரிவிற்கு 47 சட்டமன்ற தொகுதிகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 90 தொகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இதில், எஸ்டி தொகுதிகள் 9ம் அடக்கம்.

2019 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்ட யூனியன் பிரதேசத்தில் முதல் சட்டமன்றத் தேர்தலுக்கு வழி வகுக்கும் வகை யில்  தொகுகளை வரையறை செய்ய 3 பேர் கொண்ட ஜம்மு-காஷ்மீர் எல்லை நிர்ணய ஆணையத்தை  மத்தியஅரசு அமைத்தது. இந்த குழுவினர் ஆய்வு செய்து தொகுதியின் எல்லை உள்பட வரையறைகளை முடிவு செய்து  உள்ளன.

ஜம்மு காஷ்மீரில் புதிய எல்லைகள், பெயர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை இஜம்மு-காஷ்மீர் எல்லை நிர்ணய ஆணையம் நேற்று அறிவித்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 5 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் ஒவ்வொரு நாடாளுமன்ற இடங்களுக்கும் ஒரே மாதிரியான எண்ணிக்கையில் சட்டமன்ற தொகுதிகள் இருப்பதை எல்லை நிர்ணய ஆணையம் உறுதி செய்துள்ளது. அதன்படி ஒவ்வொரு நாடாளுமன்ற இடங்களுக்கும் 18 சட்டமன்ற தொகுதிகள் பிரிக்கப்பட்டு இருப்பதை இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்து உள்ளது. ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் பலம் 83ல் இருந்து 90 ஆக உயர்ந்துள்ளது. இதில் முதன்முதலாக பழங்குடியினருக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின்  புதுச்சேரி சட்டமன்றத்தின் நியமன உறுப்பினர்களுக்கு நிகரான அதிகாரங்களைக் கொண்டது.  குறைந்தபட்சம் இரண்டு “காஷ்மீர் குடியேறியவர்களை” சட்டமன்றத்திற்கு பரிந்துரைக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக எல்லை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜே&கேவில் இருந்து இடம்பெயர்ந்த நபர்களுக்கு “சில பிரதிநிதித்துவம்” வழங்குவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

எல்லை வரையறை பணிகள் முழுமையடைந்து, நாடாளுமன்ற இடங்கள் மற்றும் சட்டமன்ற இடங்கள் முறையாக உள்ளதால்  விரைவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தேர்தல் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.