வழங்குபவர்: திருமதி  கே.எம்.வசந்தி

 

தேவையானவை:

வடித்த சாதம் – 1 கப்

மிக்ஸியில் துறுவிய  அரை நெல்லிக்காய் -1 கப்

நல்லெண்ணெய் -2 டீஸ்பூன்

வறுத்து அரைத்த வெந்தயம் பவுடர்-  சிறிதளவு

பெருங்காயம்— சிறிது

காய்ந்த மிளகாய் – 3 ,

நசுக்கிய பூண்டு பல்-4,

உப்பு , மஞ்சள் தூள் கறிவேப்பிலை தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு ‘மிளகாய், கறிவேப்பிலை தாளித்து- அடுப்பை தனிவாக வைத்து வைத்து பெருங்காயம் மற்றும் வெந்தயம் பொடியை , பூண்டு சேர்க்கவும்.

பின் துறுவிய நெல்லிகாயை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து லேசாக 10 நிமிடங்கள்  வதக்கவும். பின் இத்துடன் வடித்து வைத்துள்ள சாதம் , தேவையான உப்பு, மீதம் உள்ள 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு  சேர்த்து   செய்து பறிமாறவும். (பி. கு)-கேரட், மாங்காய்,பீட்ரூட், இப்படி எல்லாவற்றிற்கும் இதே முறையை பயன்படுத்தலாம்.

கே.எம். வசந்தி

இதற்கு தொட்டுக்கொள்ள பருப்பு துவையல், வடகம் நல்ல காம்பினேஷன்.