
இஸ்லாபாத்,
பாகிஸ்தான் சென்ற டெல்லி நிசாமுதின் தர்காவைச் சேர்ந்த அஸிம்நிசாமி என்ற தலைமை மதகுருவும் நசிம் நிசாமி என்ற மதகுருவும் திடீரென மாயமாகியுள்ளனர்.
இவர்கள் இருவரும் நேற்று லாகூரில் இருக்கும் டாட்டா தர்பார் ஆலயத்தை பார்த்துவிட்டு அங்கிருந்து கராச்சி செல்ல விமான நிலையம் சென்றுள்ளனர். அங்கு ஆசிப் மட்டும் கராச்சி செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
சரியான ஆவணங்கள் இல்லாததால் நசீம் விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . இதையடுத்து கராச்சி சென்ற ஆசிப் மாயமானதாகவும், நசிம் லாகூரிலேயே மாயமானதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பாகிஸ்தான் அரசிடமும் இந்திய தூதரகத்திடமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Patrikai.com official YouTube Channel