டில்லி:

டில்லி மேம்பாட்டு ஆணையத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணை ஒரு அதிகாரி, 4 ஊழியர்கள் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அந்த பெண் கூறுகையில், ‘‘என்னை அவர்கள் இரண்டரை வருடங்களாக பாலியல் கொடுமை செய்தனர். அதை வீடியோவாக எடுத்துவைத்து மிரட்டுகின்றனர். என்னை கொன்று விடுவதாக மிரட்டி வருகின்றனர்’’ என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து மூத்த ஆணைய அதிகாரிகளிடம் அவர் புகார் அளித்துள்ளார். 2014ம் ஆண்டு அந்த பெண்ணின் கணவர் இறந்த பிறகு அவருக்கு அங்கு பணி வழங்கபட்டது. இது குறித்து போலீஸ் துணை ஆணையாளர் ரோம்ல் பானிய்யா கூறுகையில், ‘‘இது குறித்து புகார் பெற்றுள்ளோம். விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

[youtube-feed feed=1]