டெல்லி: டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கஹ்லோட்டுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமக்கு கொரோனா இருப்பதை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
கோவிட் – 19 சோதனையில் இன்று பாசிட்டிவ் என்று வந்துள்ளது. நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்தி கொண்டு உள்ளேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்று கூறி உள்ளார்.
கடந்த புதன்கிழமை கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை அவர் எடுத்து கொணடார் என்பது குறிப்பிடத்தக்கது.