டெல்லி: வரிவருவாய் குறைந்துவிட்டதால், ஊழியர்களுக்கு ஊதியம். அலுவலக செலவுகளை சமாளிக்க உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்று மத்திய அ ரசுக்கு டெல்லி மாநில ஆம்ஆத்மி அரசு கோரி்க்கை விடுத்துள்ளது.
கொரோனா காரணமாக 5ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. 2 மாதங்களாக டெல்லியில் எந்த விதமான தொழிற்சாலை, கடைகள், வர்த்தக நிறுவனங்கள் இயங்காகததால் வரி வசூல் படுமோசமாக வீழ்ச்சி அடைந்துவிட்டது.
டெல்லி அரசின் வரிவருவாயில் 80 சதவீதம் வரி குறைந்துள்ளது. இந் நிலையில் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மத்தியஅ ரசுக்கு ட்விட்டரில் விடுத்த கோரிக்கையில், பேரிடாரன இந்த இந்த நேரத்தில் டெல்லி மக்களுக்கு நிதியுதவி தந்துமத்திய அரசு உதவ வேண்டும் என்றார்.
துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவும் காணொலி வாயிலாக இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: லாக்டவுனால் நாட்டின் பொருளாதாரம் மட்டுமின்றி டெல்லியின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மாநில அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்காகவும், அலுவலகச் செலவுக்காகவும் உடனடியாக ரூ.3500 கோடி தேவைப்படுகிறது. ஆகையால் மத்திய அரசு உடனடியாக டெல்லிக்கு ரூ.5000 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் எனக் கோரி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
மிகப்பெரிய பிரச்சினை ஊழியர்களுக்கு எவ்வாறு ஊதியம் தருவது என்பதுதான். ஆகையால் உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடியை கேட்டுள்ளோம் என்றார்.