டெல்லி ஜவஹர்கால் நேரு பல்கல்லைக்கழகத்தின் மாணவர் நஜீப் அகமது (வயது 27) கடந்த மாதம் 15-ஆம் தேது முதல் மாயமானார். அவரைக் கண்டுபிடித்துத் தரக்கோரி இந்தியா கேட் முன்பாக போராடிய அவரது தாயை வயதான பெண்மணி என்றும், மகனைக் காணாத சோகத்தில் இருக்கும் தாய் என்றும் பாராமல் போலீசார் அவரிடம் அரக்கத்தனமாக நடந்து கொண்டு அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வேனில் ஏற்ரியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 20 நாட்களாக மாணவர் நஜீபை காணவில்லை. காணாமல் போனதற்கு முன்தினம் அவரை ஹாஸ்டல் வார்டன் சில மாணவர்களும், செக்யூரிட்டிகளும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனை விடுதி நிர்வாகிகள் தேர்தல் காரணமாக ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்த வழக்கை டெல்லி போலீஸ் விசாரித்து வருகிறது.
மாயமான நஜீபை தேடித்தரக்கோரி டெல்லி ஜவஹர்கால் நேரு பல்கல்லைக்கழகத்தின் மாணவர்களும் ஒரு பக்கம் போராடி வருகிறார்கள். அவர் மாயமாகி 20 நாட்கள் ஆகியும் இன்னும் அவர் பற்றி தகவல் எதுவும் தரப்படாததால் கொதிப்படைந்த நஜுபின் தாயார் டெல்லி இந்தியா கேட் அருகே தனது போராட்டத்தை துவங்கினார். அவர் போராட்டம் செய்வதாக கேள்விப்பட்டவுடனே மின்னல் வேகத்தில் அங்கு வந்த போலீஸ் அந்த வயதான பெண்மணியை கதற கதற சற்றும் இரக்கமின்றி தரதரவெனெ இழுத்து வேனில் ஏற்றியது. இந்தக் காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி பலத்த அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது
ஆனால் இதே டெல்லி கேட் முன்பாக கடந்த நவம்பர் 4-ம் தேதி பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹாமும் அவரது குழுவினரும் தங்களது புதுப்பட விளம்பரத்துக்காக அந்த இடத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு அவருக்கு முழு சுதந்திரம் அளிக்கபப்ட்டது. ஆனால் தனது மகனை காணாமல் தவிக்கும் ஒரு தாய் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்த அங்கு அவருக்கு உரிமை வழங்கப்படவில்லை என்று பலரும் கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி போலீஸ் இந்த மாதத்திலேயே சாதாரண மக்களிடம் ஈவு இரக்கமின்றி நடந்து கொள்வது இது இரண்டாவது முறையாகும். சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட ஒரு முன்னாள் இராணுவ வீரரின் மகனை இறுதிச்சடங்கு முடிந்த சிறிது நேரத்தில் கைது செய்ததும் அவருக்காக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி போராடியதும் நினைவிருக்கலாம்.