சென்னை,
இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரனிடம் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து,
மன்னார்குடியை சேர்ந்த, தற்போது சென்னை ஆதம்பாக்கத்தல் வசித்து வரும் ய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி மோகன் வீட்டிலும் டில்லி போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை திடீரென ஆதம்பாக்கம் திருவள்ளுவர் நகர் வந்த டில்லி போலீசார் அங்கு மன்னார் குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி மோகன் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
டில்லி போலீசார் நேற்று தினகரன் மற்றும் அவரது மனைவி, வீட்டின் வேலையாட்கள் ஆகியோரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து இந்த அதிரடி விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.