டெல்லியில் கடும் தட்டுப்பாடு: ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனமான ஐநாக்ஸ் மீது நீதிமன்ற அவதிப்பு வழக்கு…

Must read

டெல்லி: டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால், நீதிமன்ற உத்தரவை மீறி, ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைத்த ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனமான ஐநாக்ஸ் மீது நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமடைந்துள்ளதால், பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக நோயாகளிக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பல இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, டெல்லிக்கு தேவையான ஆக்சினை வழங்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனமான ஐநாக்ஸ் நிறுவனத்துக்கும், டெல்லிக்கு ஆக்சிஜன் சப்ளை செய்ய உத்தரவிட்டது.

மத்தியஅரசிடம் இருந்து டெல்லி மாநில அரசு  ஒரு நாளைக்கு 700 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை அரசு கோரியி உள்ளது. ஆனால், மத்தியஅரசு  300 மெட்ரிக் டன் மட்டுமே ஒதுக்கியது. இதனால்,  நாட்டின் மிகப்பெரிய மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தியாளர் ஐனாக்ஸ் டெல்லிக்கு ஆக்சிஜன் அனுப்ப உத்தரவிட்டது.

டெல்லியில் இருந்து பிற இடங்களுக்கு ஆக்சிஜன்களை  திருப்பி விட வேண்டாம் என்று  ஏப்ரல் 19 அன்று உத்தரவிட்டது. டெல்லி அரசு மற்றும் மருத்துவமனை களுடனான ஒப்பந்தத்தை கவிரவிக்கவும், தொடர்ந்து ஆக்ஸிஜனை வழங்கவும் 140 மெட்ரிக் டன் விநியோகத்தை உடனடியாக மீட்டெடுக்கவும்  ஐநாக்ஸ்க்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 21 ஆம் தேதி அதிகாலை 1:30 மணியளவில் ஒரு ஆக்ஸிஜன் டேங்கர் மருத்துவமனையை அடைந்தது, 500 க்கும் மேற்பட்ட சிக்கலான COVID-19 நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றியது. ஏப்ரல் 20 ஆம் தேதி, டெல்லி COVID-19 வழக்குகளில் 28,395 வழக்குகளைச் சேர்த்தது.

ஆனால், ஐநாக்ஸ் நிறுவனம் போதிய அளவுக்கு ஆக்சிஜனை வழங்கவில்லை என்றும், மற்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் டேங்கரை திரும்பி விட்டுள்ளதாகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

நிறுவனம் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளதாகவும், அதை மாநிலத்திற்கு வழங்கவில்லை என்றும் டெல்லி அரசாங்கத்துக்கான வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து,  ஐனாக்ஸ் நிர்வாக இயக்குனர் அல்லது உரிமையாளரை ஏப்ரல் 21 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.

More articles

Latest article