டெல்லியில் கடந்த சில தினங்களாக படிப்படியாக அதிகரித்து வந்த வெப்பம் நேற்று 47.4°C (117.3°F) ஆக பதிவானது.

டெல்லியின் நஜஃப்கர் வானிலை மையத்தில் பதிவான இந்த வெப்பம் இயல்பை விட 3.7°C கூடுதல் என்பதும் இது இந்த ஆண்டின் அதிகபட்சமான வெப்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் உள்ள 8 வானிலை மையத்திலும் 47°C வெயில் பதிவானதை அடுத்து அடுத்த 5 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் யாரும் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் மே 11 முதல் ஜூன் 30 வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளை நடத்தும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel