டில்லி,
லைநகர் டெல்லி மாநில கவர்னராக இருந்த நஜீப் ஜங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
டில்லி மாநில முதல்வராக ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த  அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அங்கு கவர்னருக்கும், முதல்வருக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது.

இதன் காரணமாக மாநில அரசுக்கும் கவர்னருக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து டில்லி கவர்னராக இருந்த நஜீப் ஜங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து கூறிய நஜீப், தான் மீண்டும் ஆசிரியர் பணிக்கு திருப்பப்போவதாக கூறியுள்ளார்.
இவர், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியின் போது கடந்த 2013ம் ஆண்டு ஜூலை மாதம் டில்லி மாநில துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டவர்.
அதன்பிறகு பாரதியஜனதா மத்தியில் ஆட்சி அமைந்ததும், பல்வேறு மாநில ஆளுநர்கள்  அதிரடியாக மாற்றப்பட்டனர். எனினும் டில்லி மாநில துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.