டில்லி

டில்லியில் வாழும் இஸ்லாமிய அகதிகள் குடியுரிமை சட்டப்படி இந்தியப் பிரஜையாகக் கிறித்துவ  மதத்துக்கு மாறி வருகின்றனர்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் பாஜக அரசு குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல் செய்தது.    இந்த புதிய சட்டப்படி 2014 ஆம் வருடம் டிசம்பர் 31 வரை பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான்,மற்றும் வங்கதேசத்தில் இருந்து இந்தியா வந்துள்ள அகதிகளில் இந்து, கிறித்துவர், புத்த மதத்தினர், சமணர் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது.  இதில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் இந்தியப் பிரஜையாகும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி நாட்டில் பல இடங்களில் கடும் போராட்டம் வெடித்தது.  ஆயினும் சட்டம் விலக்கப்படவில்லை.  இதனால் கலக்கம் அடைந்துள்ள டில்லி வாழ் இஸ்லாமிய அகதிகள் கிறித்துவர்களாக மதம் மாற தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.    இவர்கள் ஆப்கானிய கிறித்துவ தேவாலயங்களுக்குச் சென்று வருவதாகக் கூறப்படுகிறது.   ஆனால் தேவாலய வட்டாரங்கள் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர்.

இவ்வாறு மதம் மாறுபவர்கள் அதற்காகக் கிறித்துவப் பெண்களை மணம் புரிய முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது..    இவர்கள் குடியுரிமை பெறுவதற்காக மணமாகி குழந்தைகள் பெற்ற பெண்களையும் இரண்டாவது திருமணம் செய்யத் தயாராக உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.    இதில் மியான்மர் அகதிகள் இந்தியப் பிரஜையாக முடியாது என்பதால் அவர்கள் தம்மை வங்க தேச அகதிகள் எனக் கூறி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.